தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல சாக்கு போக்குகளை சொல்லி தமிழகத்தின் மின் துறை அமைச்சர் அனைத்து தரப்பட்ட மக்களின் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். தற்போது, நடைபெற்று வரும் ஆட்சியை, சிலரை பணக்காரர்களாக ஆக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. நீங்கள் செல்வ செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா?” என கேட்டுள்ளார். பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் அறிக்கையில், “மின்கட்டண உயர்வுக்கு மத்திய அரசின் அழுத்தம் தான் காரணம் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகிறார். டாஸ்மாக் கட்டணத்தை உயர்த்தினால் கூட மத்திய அரசு தான் காரணம் என்று சொல்வார்களா? இவர்களின் நிர்வாக திறமையற்ற நடவடிக்கைகளால் தான் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். எல்லாவற்றிற்கும் பிரதமர் மோடியை குற்றம்சாட்டுவதற்கு இவர்களுக்கு வாடிக்கை. மத்திய அரசு சொல்வது அனைத்தையும் அவர்கள் கேட்கிறார்களா?” என கூறப்பட்டுள்ளது.