பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தமது மங்கோலிய பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் புறப்பட்டு சென்றார். இன்று, டோக்கியோவில் நடைபெறும் 2வது பாரதம் ஜப்பான் 2+2 அமைச்சர்கள் அலவிலான பேச்சுவார்த்தையில், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கருடன் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார். ஜப்பான் சார்பில் அதன் பாதுகாப்புத்துறை அமைச்சர் யசுகாசு ஹமாடா, வெளியுறவுத்துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இருநாடுகளிடையே பல்வேறு துறைகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக, ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடாவையும் சந்திக்க உள்ளார். டோக்கியோவிலுள்ள பாரத தூதரகம் ஏற்பாடு செய்துள்ள ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ராஜ்நாத் சிங், ஜப்பானில் வசிக்கும் புலம் பெயர்ந்த பாரத நாட்டினருடன் கலந்துரையாடுகிறார். பாரதமும் ஜப்பானும் சிறந்த, உலகளாவிய நட்புறவை கொண்டுள்ளன. இந்த ஆண்டுடன் இருநாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகள் தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைகின்றன என்பது இந்த தருணத்தில் குறிப்பிடத்தக்கது.