கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கிறிஸ்தவ மிஷனரி பள்ளி ஒன்றில் மாணவர்கள் பள்ளிக்கு பைபிளை எடுத்து வருவதை அப்பள்ளி நிர்வகம் கட்டாயமாக்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மாநிலத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களிலும் கர்நாடக அரசு ஆய்வு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து தொகுதிக் கல்வி அதிகாரிகளையும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பாடத்திட்டங்களை ஆய்வு மேற்கொள்ளுமாறு கர்நாடக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ், சிறுபான்மை நிறுவனங்களாக இருந்தாலும் சரி, மற்றவையாக இருந்தாலும் சரி, கர்நாடக கல்விச் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.