அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் லாபகரமான விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். இதற்கு எம்.எஸ்.பி தீர்வு அல்ல, எனினும் எம்.எஸ்.பி சட்டபூர்வ உரிமையாக்கப்பட வேண்டும். உற்பத்தி செலவின் அடிப்படையில் எம்.எஸ்.பி நிர்ணயம் செய்யப்பட வேண்டும். கொள்முதல் நிலையங்களை திறம்பட செயல்படுத்த வேண்டும். வேளாண் இடு பொருட்களுக்கு மானிய விலை, அனைத்து வேளாண் பொருட்களுக்கும் பயிர் காப்பீடு, கிசான் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு, தேங்காய் வாழையை எம்.எஸ்.பியில் சேர்ப்பது, அனைத்து விவசாயிகளுக்கும் உழவர் அட்டை, கிசான் கிரெடிட் கார்டு, விவசாயிகளுக்கு கால்நடைகள் மானிய விலையில் வழங்குதல், விவசாயிகளுக்கு பென்ஷன் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 8’ல் பாரதிய கிசான் சங்கம் அகிலபாரத அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதம், மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.