ஜம்மு காஷ்மீரில் எல்லையோரப்பகுதியில் உள்ள ஜலாஸ் கிராமத்தில் ஓராசிரியர் பள்ளிகளான ஏகல் வித்யாலயா பள்ளிகள் நடக்கின்றன. அதன் ஆசிரியர்களுக்கும், ஏழை கிராமவாசிகளுக்கும் 100 சூரிய விளக்குகளை பாரதிய சிக்ஷா சமிதி விநியோகித்துள்ளது. இதைத்து தவிர, இந்த கிராமத்தில் நூற்றுக்கணக்கான வால்நட் செடிகள் இந்த கிராம மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப் பட்டன. இன்னும் 5 ஆண்டுகளில் இவை வளர்ந்து பலன் தரும். இது இப்பகுதி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும்.