விலகிய இங்கிலாந்து விலகிய பாரதம்

பாரதத்தில் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் 10 நாள் கட்டாய தனிமைப்படுத்துதலை அறிவித்து இங்கிலாந்து பாரதத்துடன் தொடர்ந்து மோதல்போக்கை கடைப்பிடித்து வருகிறது. பலமுறை எடுத்துக் கூறிய பிறகும் இங்கிலாந்து தொடர்ந்து முரண்டு பிடிக்கிறது. எனவே, வேறுவழியின்றி பாரதமும், இனி இங்கிலாந்தில் இருந்து வருபவர்களுக்கு 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலை அறிவித்தது. இதனால், 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலை தங்கள் நாட்டு வீரர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெறவுள்ள ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து அறிவித்தது. இதனையடுத்து, இங்கிலாந்தின் பர்மிங்காமில் வரும் 2022 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 08 வரையில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகுவதாக பாரத ஹாக்கி ஆணையம் கூறியுள்ளது.  2022 செப்டம்பர் 10 முதல் 25 வரை சீனாவின் ஹாங்ஜோவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் அதிக கவனம் செலுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.