இலங்கைக்கு உரம் கொடுத்த பாரதம்

இலங்கை அரசு சீனாவில் இருந்து வாங்கிய உரங்களில் ஆபத்தான பாக்டீரியா உட்பட பல குளறுபடிகள் இருந்ததால் அதனை நிராகரித்து திருப்பி அனுப்பியது. அந்த சீன நிறுவனத்தை தடையும் செய்தது. இந்நிலையில், இலங்கை அதன் அவசர உரத்தேவைக்காக பாரத அரசிடம் கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து நமது மத்திய அரசும் 1 லட்சம் கிலோ நானோ நைட்ரஜன் உரத்தை இந்திய விமானப்படையின் இரண்டு சி-17 குளோப் மாஸ்டர் விமானங்கள் மூலமாக அனுப்பி வைத்து உதவியது. மத்திய அரசு, அதன் ‘அண்டை நாடுகளுக்கு முதலில்’ என்ற கொள்கையின் ஒரு பகுதியாக அவசர தேவைகளின் போது இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.