ஐ.நாவுக்கு பாரதம் எச்சரிக்கை

கொரோனா நோயாளிகளுக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவுவதாகக் கூறி, வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் ராணா அய்யூப் நன்கொடை திரட்டி அதனை அவரது சகோதரி, தந்தையின் வங்கி கணக்குகளுக்கு போட்டு நிதி முறைகேடு செய்தார். இதனையடுத்து அவரின் 1.77 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. நிதிமுறைகேடு குறித்து விசாரித்து வருகிறது. இதற்கிடையில், இவ்விவகாரம் குறித்து ஐ.நா சபை குரல் எழுப்பியது. ராணா அய்யூப் நீதிமன்றத் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியது. இதற்கு பாரதம் கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. ‘யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது, தவறான செய்தியைப் பரப்புவது ஐ.நா சபையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும். நீதித்துறை துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. பாரதம் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துகிறது’ என்று தெரிவித்துள்ளது.