உள்நாட்டிலேயே முழுக்க முழுக்க தயாரான விண்வெளி ஆய்வு நிலையத்தை 2030ம் ஆண்டு வாக்கில் விண்ணில் நிலை நிறுத்த உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. ககன்யான் திட்டம் செயல்படுத்தப்பட்ட சில ஆண்டுகளில் இத்திட்டமும் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக 2019ம் ஆண்டு முதல்முறையாக இஸ்ரோ தலைவர் சிவன், இதை பற்றிய தகவல்களை வெளிஉலகிற்கு அறிவித்திருந்தார். அதன்படி இந்த விண்வெளி ஆய்வு மையம் சுமார் 20 டன்கள் இருக்கும். பூமியில் இருந்து 400 கிலோமீட்டர் உயரத்தில் விண்வெளியில் நிலைநிறுத்தப்படும். விண்வெளி வீரர்கள் 15 முதல் 20 நாட்கள் தங்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.