பாரதம் திரும்பும் சிலை

உத்தரப் பிரதேசம் பாண்டா மாவட்டத்தின்  லோக்ஹரி என்ற கிராமத்தில் உள்ள கோயிலில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட ‘யோகினி’ என்ற ஆட்டுத் தலையுடன் கூடிய சிலை, பாரதத்திடம் திருப்ப ஒப்படைக்கப்படுவதாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த சிலை 10ம் நூற்றாண்டை சேர்ந்தது. இந்த சிலை கடந்த 1980ம் ஆண்டுகளில், உத்தரப் பிரதேசத்திலிருந்து சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சிலை கடந்த 1980ம் ஆண்டுகளில், உத்தரப் பிரதேசத்திலிருந்து சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட  இந்த சிலை, லண்டனில் உள்ள ஒரு கலை அரங்கில் கடந்த 1988ம் ஆண்டு காட்சிக்கு வைக்கப்பட்டது. இதை மீட்கும் முயற்சியில் நமது பாரதத் தூதரகம் இறங்கியது. அதன் முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. கடந்த பொங்கல் அன்று யோகினி சிலை லண்டனில் உள்ள பாரதத் தூதரகத்தை வந்தடைந்தது. இது அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பப்பட்டு டெல்லியில் உள்ள தொல்லியல் ஆய்வகத்தை விரைவில் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.