பாரதத்தில் தற்போது அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் சேவைகளின் ஆதிக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த மாபெரும் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது பேமெண்ட் சேவைகள்தான். பாரதத்தின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் சேவையான யு.பி.ஐ தளம் இதில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் பாரதத்தில் யு.பி.ஐ மூலம் பரிமாற்றம் செய்யப்பட்ட தொகையின் அளவு கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்பட்ட பண பரிமாற்றத்தை விடவும், யூ.பி.ஐ மூலம் செய்யப்பட்ட பண பரிமாற்றத்தின் அளவு 42 சதவீதம் அதிகம். கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் யு.பி.ஐ மூலம் சுமார் 6.06 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகை பண பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த 2020 ஜூலையில் 2.91 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஜூலை 2021ல் கார்டு மூலம் செய்யப்பட்ட மொத்த பண பரிமாற்றத்தின் அளவீடு 1.36 லட்சம் கோடி ரூபாய். நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம். இவ்வருடம் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் ஒரு டிரில்லியன் என்ற அளவை தாண்டும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது. பிரதமர் மோடி, ஐ.நா சபையில் பேசும்போது, பாரதம் மாதம்தோறும் 3.5 பில்லியன் பணப்பரிமாற்றத்தை யு.பி.ஐ மூலம் செய்துவருவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.