விஜயனுக்கு எதிராக பாகவதி போட்டி

கேரளா, கண்ணூர் மாவட்டத்தில் உள்ள வலயாரில் 2017ல் கூலி வேலை செய்யும் ஒரு குடும்பத்தை சேர்ந்த 13 வயதுடைய சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதனை பார்த்த சாட்சியான 9 வயதான அவளின் தங்கையும் ஒரே மாதத்தில் மர்மமான முறையில் இறந்துவிட்டாள். இதை செய்தவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர் என்பதால்  காவல்துறை இதனை ஒரு சாதாரண மரணமாக பதிவு செய்து குற்றவாளிகள் தப்ப உதவி செய்தது. இதனால் மனவேதனை அடைந்த அந்த குழந்தைகளின் தாய் பாகவதி, கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான பினராயி விஜயனுக்கு எதிராக தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவருக்கு குழந்தைகள் அணியும் உடையான ‘பிராக்’  தேர்தல் சின்னமாக வழங்கப்பட்டுள்ளது.