பத்ரகிரியார் சிலை உடைப்பு

சித்தர் பட்டினத்தாரின் சீடர் பத்ரகிரியார். திருவிடைமருதுார் மகாலிங்கேஸ்வரர் கோயிலின், கிழக்கு கோபுரம் அருகே பட்டினத்தாருக்கு சிலை உள்ளது. அதே போல் மேற்கு கோபுரம் அருகே பத்ரகிரியாருக்கும் ஒரு சிலை உள்ளது. கடந்த 14ல் நைவேத்தியத்திற்காக கோயில் அர்ச்சகர்கள், பத்ரகிரியார் சிலை உள்ள பகுதிக்கு சென்றபோது, அங்கே பத்ரகிரியாரின் சிலை பீடத்தோடு கீழே சாய்க்கப்பட்டு, சிலையின் தலை, கை, கால்கள் உடைக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த திருவிடைமருதுார் காவல்துறையினர், சி.சி.டிவி பதிவு வாயிலாக, சிலையை பாநாசத்தை சேர்ந்த மாரிமுத்து உடைத்தார் என்பது தெரிய வந்தது. இவர் கொத்தனார் வேலை செய்பவர். மது போதையில், விரக்தியில் சிலையை உடைத்துள்ளார். அவரை கைது செய்துள்ல்ளோம், விசாரித்து வருகிறோம்’ என தெரிவித்தனர். திருவிடைமருதுார் சென்றிருந்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, உடைந்த சிலையை பார்வையிட்டார். பிறகு  ‘காவல்துறை அறிக்கை சந்தேகமளிக்கிறது. நியாயமாக விசாரித்து  உண்மையை சொல்ல வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற நிகழ்வுகள் தொடராமல் இருக்கும்’ என கூறினார். உஜ்ஜைனி அரசனான பத்ரகிரியார், தவறாக பட்டினத்தாருக்கு கழுமர தண்டனையளித்தார். பட்டினத்தாரின் ஒரு பாடலால் கழுமரம் தீப்பற்றி எரிந்தது. ஞானம் பெற்ற பத்ரகிரியார் அரச போகங்களைத் துறந்து பட்டினத்தாரின் சீடனாக அவருடனேயே கிளம்பினார் என்பது வரலாறு.