உலகின் மிகச் சிறந்த 7 அமைப்புகளின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் உள்ள 15 வகையான உளவு அமைப்புகளில் முதலிடத்தில் உள்ள சி.ஐ.ஏ. 1947ல் தொடங்கப்பட்டது. அரசு, தனிநபர்கள் குறித்த விவரங்களை சேகரித்து அதனை அதிகாரிகளுக்கு அனுப்பும் வேலையை செய்யும் இந்த அமைப்பில் 21,575 பேர் பணிபுரிகின்றனர் என கூறப்படுகிறது. வியட்நாம், போர், அல்காய்தாவுக்கு எதிரான போர் ஆகியவற்றில் சி.ஐ.ஏ சிறப்பாக பணியாற்றியுள்ளது.
சி.ஏ.ஐவுக்கு அடுத்த இடத்தில் இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது. இந்த அமைப்பு 1949ல் தொடங்கப்பட்டது. சுற்றிலும் எதிரிகள் சூழ்ந்துள்ள இஸ்ரேலுக்கு மொசாத் தான் கண், காதுகளாக இருக்கிறது. இஸ்ரேல் மக்கள் நிம்மதியாக உறங்க இந்த அமைப்பின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. இந்த அமைப்பில் 1,200 பேர் பணிபுரிவதாக கூறப்படுகிறது. உலகில் வேறு எந்த உளவுத்துறையிலும் இல்லாத ஒரு விசேஷமாக, இந்த அமைப்பில் எந்த நாட்டை சேர்ந்தவர்களும் அவர்களது வலைத்தளத்தில் பதிவு செய்துகொண்டு இணைந்து பணியாற்றலாம். அவர்கள் தரும் உளவுத் தகவலுக்கு ஏற்ப அவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.
உலகின் சிறந்த உளவு அமைப்புகளின் பட்டியலில் ‘ரா’ என்று அழைக்கப்படும் இந்திய அரசின் ரிசர்ச் அண்ட் அனலைசிஸ் விங் மூன்றாவது இடத்தில் உள்ளது. 1968ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு பிரதமர் அலுவலகத்தை முகவரியாகக் கொண்டே செயல்படுகிறது. வெளிநாட்டு உறவுகள், வெளிநாட்டு பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை கவனித்துக்கொள்வது ‘ரா’ அமைப்பின் முதன்மை பணி. மேலும், இந்திய அணுசக்தி பாதுகாப்புக்கான தனிப்பொறுப்பையும் ரா பெற்றுள்ளது.
இங்கிலாந்தின் சீக்ரெட் இண்டிஜென்ஸ் சர்வீசஸ் என்ற உளவு அமைப்பை ‘எம் 16’ என்றும் அழைக்கின்றனர். 1909ல் துவங்கப்பட்ட இந்த அமைப்பு, பனிப்போர் காலக்கட்டம், அமெரிக்காவின் பென்டகன் கட்டடத்தை பயங்கரவாதிகள் தகர்த்த விவகாரம், ஆப்கன் போர் என பல விஷயங்களில் முக்கிய பங்கற்றியுள்ளது. மேலும், இந்த அமைப்பு 1980ல் லெபனான் நாடு விடுதலை பெற்றதிலும் முக்கிய பங்காற்றியது.
ஐந்தாவது இடத்தை ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் என்ற ‘எப்.எஸ்.எஸ்’ உளவு அமைப்பு இடம் பிடித்துள்ளது. முதல் ஆப்கன் போரில் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட தோல்வியையடுத்து 1995ல் இது முழுமையாக மறுசீரமைக்கப்பட்டது. ஆறாவது இடத்தில் சீனாவின் மினிஸ்ட்ரி ஆஃப் ஸ்டேட் செக்யூரிட்டி என்ற எம்.எஸ்.எஸ் உள்ளது. 1983ல் தொடங்கப்பட்ட இந்த உளவு அமைப்பு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பல ரகசியப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. சிறந்த 7 உளவு அமைப்புகள் பட்டியலின் இறுதியில் பாகிஸ்தானின் இண்டர் செக்யூரிட்டி இண்டெலிஜென்ஸ் என்ற ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு உள்ளது. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 7 உளவு அமைப்புகளில் ஒன்றான இது, 1948ல் பாரத பாகிஸ்தான் போரின் போது தொடங்கப்பட்டது. 1965 பாரத பாகிஸ்தான் போர், கார்கில் போர், ஆப்கன் போர் ஆகியவற்றில் தீவிரமாக செயலாற்றியது. இதில் 10,000 பேர் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.