சிறப்பாக செயல்பட்ட பாரதம்

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஐ.நா., பாதுகாப்பு கௌன்சிலுக்கு சுழற்சி முறையில் பாரதம் தலைமை ஏற்றது. இந்த ஒரு மாதத்தில் பாரதத்தின் தலைமையில் ஐ.நா பாதுகாப்பு கௌன்சில் மிக சிறப்பாக செயல்பட்டது, பல முன்மாதிரிகளை உருவாக்கியுள்ளது, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிரேசில் உள்ளிட்ட நாடுகள் பாராட்டுத் தெரிவித்துள்ளன. பாரதப் பிரதமர் ஒருவர், ஐ.நா பாதுகாப்பு கௌன்சில் கூட்டத்திற்கு தலைமை ஏற்றது இதுவே முதன் முறை. பிரதமர் மோடி தலைமையில், கடல்சார் பாதுகாப்பு குறித்த கூட்டம் நடைபெற்றது. இதுவரை எந்த ஐ.நா சபை கூட்டத்திலும் பங்கேற்காத ரஷ்ய அதிபர் புதின் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். ஐ.நா அமைதிப் படையினர் செய்யும் குற்றங்களுக்கு அவர்களை பொறுப்பாக்கும் முக்கிய வரைவு தீர்மானத்தை, பாரதம் தாக்கல் செய்தது. இதுவரை இல்லாத வகையில் இதனை 80 உறுப்பு நாடுகள் வழிமொழிந்தன. 15 உறுப்பு நாடுகளும் ஒருமித்த ஆதரவு தெரிவித்தன. ஆப்கன் தொடர்பாக, ஒரே மாதத்தில் மூன்று முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.