மதுக்கடைகளை மூட வேண்டும்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், பணியில் இருந்து நேற்று ஓய்வு பெற்றார். அதனையொட்டி உயர் நீதிமன்ற வளாகத்தில்  அவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது. அப்போது பேசிய அவர், ‘நான் ஒரு போதும் என்னை நீதிபதியாக நினைத்துக் கொண்டதில்லை. சாதாரண நபராகவே இருந்தேன். வழக்கறிஞர் மற்றும் நீதிமன்றத்தின் மேன்மை காக்கப்படவில்லை எனில், மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர். சுதந்திர போராட்ட காலத்தில் பங்கேற்ற வழக்கறிஞர்கள் மேன்மையை, மீண்டும் கொண்டு வர வேண்டும். இளம் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் தொழிலின் புனிதத்தை மீட்டெடுக்க வேண்டும். நீதிபதியாக பணி ஓய்வு பெறுவது திருப்தியாக இருந்தாலும், வழக்கறிஞர் தொழிலை முறைப்படுத்த முடியாதது, டாஸ்மாக் கடைகளை மூட முடியாமல் போனது மனதுக்கு நிறைவை அளிக்கவில்லை. மக்கள் நலன் கருதி மதுக்கடைகளை பகுதி அளவில் அரசு மூட வேண்டும். அதன் வாயிலாக, ஒரு நாள் மதுவிலக்கு அமலாகும்’ என தெரிவித்தார்.