கோயிலுக்குள் தடுப்புச் சுவர்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கரக் மாவட்டத்தில் உள்ள ஹிந்து கோயில் வளாகத்திற்குள் அம்மாவட்ட நிர்வாகம் அத்துமீறி நுழைந்து ஒரு தடுப்புச் சுவர் கட்டியுள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு, உள்ளூர் மதகுரு மௌலானா ஷரிஃபுல்லா தலைமையிலான ஒரு கும்பல் இக்கோயிலை இடித்துத் தள்ளியது. நீதிமன்றத்திற்கு இவ்விவகாரம் சென்றதால் கோயிலை புனரமைப்பு செய்துத்தர மாவட்ட நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இந்நிலையில் இப்போது ஜாமியத் உலமா இ இஸ்லாம் ஃபாஸியின் உள்ளூர் மதகுரு ஹபீஸ் ஃபைசுல்லா, கோயில் அருகில் ஒரு மதக் கருத்தரங்கை நடத்தினார். அதில், கோயில் விரிவாக்கம், யாத்ரிகர்கள், பகதர்கள் தங்குமிடங்கள் கட்டக்கூடாது என பல்வேறு ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. இதனையடுத்தே மவட்ட நிர்வாகம் தற்போது தடுப்புச் சுவர் கட்டியுள்ளது. இது அங்கு வாழும் ஹிந்து சிறுபான்மையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.