முஸ்லிம்கள் நடத்தும் இறைச்சி கடைகளில், ஹலால் முறைப்படி விலங்குகள் கொல்லப்பட்டு இறைச்சி விற்பனை செய்யப்படுகின்றன. சமீப காலமாக தேசமெங்கும் இதற்கு ஹிந்துக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவ்வகையில், கர்நாடகாவில் சில ஹிந்து அமைப்புகள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஹலால் இறைச்சிகளை கர்நாடகாவில் முற்றிலும் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, இந்த விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து மாநில அரசு ஆய்வு செய்யும்’ என தெரிவித்தார்.