பாரதத்தில் சமீப காலமாக அதிகரித்து வரும் முஸ்லிம் வன்முறைகளை வன்மையாகக் கண்டித்து, சமீபத்தில் நுபுர் ஷர்மா வெளியிட்ட கருத்தை முன்வைத்து நாட்டின் பல பகுதிகளில் சமீபத்தில் நடத்தப்பட்ட வன்முறை சம்பங்களை கண்டித்தும் இன்று (ஜூன் 16) நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த உள்ளதாக விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது. இதன்படி, பஜ்ரங் தளம்; வி.எச்.பியின் இளைஞர் பிரிவு செயற்பாட்டாளர்கள் நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சித் தலைமையகத்தின் முன்பாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மேலும், உ.பி, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு எதிராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் அவர்கள் மனு அளிக்க உள்ளனர். முன்னதாக இதுகுறித்து பேசிய வி.ஹெச்.பி அகில உலக பொதுச் செயலாளர் மிலிந்த் பரண்டே, ‘வன்முறைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மசூதிகளுக்கு வெளியே கடுமையான கண்காணிப்பு மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். நாட்டில் முஸ்லிம் ஜிஹாதி அடிப்படைவாதிகளால் அதிகரித்து வரும் பயங்கரவாத சம்பவங்களுக்கு எதிராக, வி.ஹெச்.பியினர் தெருக்களில் இறங்கி போராடுவார்கள். வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.