காஷ்மீரில் கடந்த சில நாட்களாக ஹிந்துக்களை குறிவைத்து முஸ்லிம் ஜிஹாதி பயங்கரவாதிகள் கொன்று வருகின்றனர். இரண்டு தினங்களுக்கு முன் அரசு பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியரும், மற்றொரு ஆசிரியரும் கொல்லப்பட்ட விவகாரத்தில் ‘தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்’ என்று பாகிஸ்தான் ஆதரவினால் புதிதாக தோன்றியுள்ள பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்று உள்ளது. ஆகஸ்ட் 15 அன்று பள்ளி மாணவர்களை சுதந்திர தினத்தை கொண்டாட அந்த ஆசிரியர்கள் பள்ளிக்கு அழைத்தனர். அதனல்தான் கொன்றோம், கடைகள் அலுவலகங்களில் யாரும் சி.சி.டிவி பொருத்தக்கூடாது, வெளி மாநிலத்தவர்கள் காஷ்மீரில் இருப்பதை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என கூறியுள்ளனர் அந்த பயங்கரவாதிகள். கடந்த வருடம் ஜூன் மாதத்தில் இவர்கள் காஷ்மீரில் முஸ்லிம் அல்லாதவர்களை கொல்வோம் என மிரட்டல் விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.