அழகிரியின் அழுகை

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் 40 தொகுதிகளை கேட்கிறது. ஆனால் தி.மு.க. 22 தருவதாக கூறுகிறது. இந்த இழுபறி குறித்து விவாதிக்க தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. அதில், ‘கடந்த 1980 சட்டசபை தேர்தலில் தி.மு.க.விடம் 50 சதவீதம் தொகுதிகளை பெற்ற நாம் தற்போது 10 சதவீத தொகுதிகளைதான் கேட்கிறோம். இடைப்பட்ட காலத்தில் தி.மு.க. வளர்ந்து விட்டதா அல்லது காங்கிரஸ் தேய்ந்து விட்டதா? தி.மு.கவின் ஓட்டு சதவீதம்கூட 34ல் இருந்து 24 சதவீதமாக குறைந்துவிட்டது. காங்கிரசுக்கும் குறைந்துள்ளதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் கூட்டணியின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தி இன்னமும் காங்கிரசுக்கு உள்ளது. தி.மு.க.விடம் தொடர்ந்து நாம் அவமானத்தை சந்தித்து வருகிறோம். கூட்டணியில் குழப்பம் வரக்கூடாது என்பதற்காக அவமானத்தை பொறுத்துக் கொள்கிறோம். இறுதி முடிவை தி.மு.கதான் எடுக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் அழகிரிக்கு எந்த மரியாதையும் தேவையில்லை. ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் எனக்கும் சட்டசபை காங்கிரஸ் தலைவராக உள்ள ராமசாமிக்கும்கூட உரிய மரியாதை கிடைக்கவில்லை’ என கூறி கண்ணீர் விட்டு அழுததாக கூறப்படுகிறது.