ஆகஸ்ட் மாத திருமலை தரிசன டிக்கெட்

கொரோனா பரவல் காரணமாக, திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெற்று மட்டுமே செல்லமுடியும். ஒவ்வொரு மாதத்திற்கும் தேவையான டிக்கெட்டுகள், அதற்கு முந்தைய மாதத்தின் இறுதி வாரங்களில், தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. அவ்வகையில், ஆகஸ்ட் மாதத்திற்கான, 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள், வரும் 20ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.