தடா பெரியசாமி வீட்டின் மீது தாக்குதல்

பா.ஜ.கவின் மூத்த தலைவரும் எஸ்.சி அணி மாநிலத் தலைவருமான தடா பெரியசாமியின் வீடு மற்றும் கார் மீது மர்ம நபர்கள் தாக்குல் நடத்தியுள்ளனர். அவரது வீடு, கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை சூறையாடியுள்ளனர்.இதற்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நேற்று இரவு பா.ஜ.க. எஸ்.சி அணி மாநிலத் தலைவர் தடா பெரியசாமி அவர்கள் வீட்டின் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தி, அவரது வாகனத்தை அடித்து நொறுக்கியுள்ளனர். சமூக விரோதிகளின் இந்தச் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தடா பெரியசாமி போன்ற உண்மையான சமூக நீதிக்கு உழைக்கும் பா.ஜ.க. தலைவர்களின் செயல்பாடுகள், போலி சமூக நீதி பேசிக் கொண்டிருப்பவர்களை எந்த அளவுக்கு அச்சுறுத்தியிருக்கிறது என்பது இது போன்ற நிகழ்வுகளில் இருந்து தெரிகிறது. இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை. ஏழை எளிய மக்களுக்கான எங்கள் பணிகளை, இது போன்ற கோழைத்தனமான செயல்களால் தடுக்க முடியாது” என தெரிவித்துள்ளார். முன்னதாக, திருமாவளவன் பெரிய ஏஜென்ட், வெளிநாட்டு கைக்கூலி, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாத்திற்கும் வக்காலத்து வாங்கும் வேலை செய்பவர். அம்பேத்கருக்கு, திருமாவளவன் துரோகம் செய்கிறார், அவரது, பெயரை சொல்லி ஊரை ஏமாற்றி வருகிறார். அவர், ஒரு பிழைப்புவாதி என திருமாவளவனையும், ஆ. ராசாவையும் தடா பெரியசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிக கடுமையாக விமர்சித்திருந்தார். எனவே தற்போது தட பெரியசாமியின் வீடு மற்றும் கார் மீதான தாக்குதல் அக்கட்சியினரின் செயலாக இருக்கலாமோ? சில நாட்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவரது வீட்டில் வி.சி.கவினர் நாட்டுவெடிகுண்டு வீசியதாக புகார் எழுந்த நிலையில் ஒரு சில நாட்களில் தற்போது நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பல்வேறு வகையான சந்தேகங்களை எழுப்பியுள்ளது என என்று பொதுமக்கள் சமூக ஊடகங்களில் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.