குரு தேஜ் பகதூரின் 400வது பிரகாஷ் பூராப் கொண்டாட்டத்தை பாரதம் தொடங்கிய அதே நாளில், பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாரா பிரபந்தக் கமிட்டியின் முன்னாள் தலைவர் மஸ்தான் சிங் மற்றும் அவரது இரு மகன்களான திலாவர் சிங் மற்றும் பல்லா சிங் ஆகியோரை உள்ளூர் முஸ்லிம்கள் மோசமாகத் தாக்கியுள்ளனர். சமூக ஊடக தளத்தில் வெளியான திலாவர் சிங்கின் பேட்டியில், ‘எனக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நன்கானா சாஹிப்பில் ஐந்தரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது அதனை நாங்கள் விற்க விரும்பவில்லை. ஆனால் அந்த நிலத்தை விற்குமாறு உள்ளூர் முஸ்லிம்களும், காவல்துறையும், நிர்வாகமும் கடந்த பத்து வருடங்களாக எங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். நிலத்தில் நாங்கள் அறுவடை செய்து கொண்டிருந்த போது, திடீரென சிலர் அங்கு வந்து எங்களை கொடூரமாக தாக்கினர். பாகிஸ்தானில் நாங்கள் சுதந்திரமாகவும் இல்லை, பாதுகாப்பாகவும் இல்லை. உள்ளூர் மக்கள், அரசு நிர்வாகம், என அனைவராலும் நாங்கள் சிரமப்படுகிறோம்’ என தெரிவித்துள்ளார்.