உத்தரபிரதேசத்தின் கான்பூரில் உள்ள பூரணி பஜார் பகுதியில், ஆர்.எஸ்.எஸ் நகர பிரசாரக் பாஸ்கர் சிங் என்கிற மனிஷ், யாஷ்ராஜ் மற்றும் பலர் அனுப் சிங் என்ற ஆர்.எஸ்.எஸ் தொண்டரின் வீட்டின் முன்பாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். கர்நாடகாவில் நடந்து வரும் ஹிஜாப் பிரச்சனையை பற்றி அவர்கள் விவாதித்தனர். அப்போது அங்கு வந்த 20 பேர் கொண்ட முஸ்லிம் மதவெறி கும்பலை சேர்ந்தவர்கள், ஆர்.எஸ்.எஸ் குழுவினரை கம்புகள், இரும்புக் கம்பிகளால் கடுமையாகத் தாக்கினர். முஸ்லிம் மதவெறி கும்பலின் கொலைவெறி நோக்கத்தைப் அறிந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அருகில் உள்ள ஒரு கடையில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் முஸ்லிம் கும்பல் அங்கும் சென்று அவர்களை தாக்கியது. பாஸ்கர் சிங்கின் தங்கச் சங்கிலி மற்றும் ரூ. 35 ஆயிரம் பணத்தையும் அக்கும்பல் பிடுங்கிச் சென்றது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க, அப்பகுதியில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களுக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கர்நாடகாவில் இளம் பஜ்ரங் தள செயற்பாட்டாளரான ஹர்ஷ் கொடூரமாக கத்தியால் குத்தி கொல்லப்பட்ட அதே நாளில் இச்சம்பவம் நடைபெற்றது கவனத்தில் கொள்ளத்தக்கது.