ஹிந்துக்கள் மீது தாக்குதல்

சமீபத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கிஷன் பொலியா என்ற ஹிந்து இளைஞர் முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 முஸ்லிம் மதகுருமார்களுக்கு இக்கொலையில் பங்கு இருப்பதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் குஜராத்தில் இதேபோன்று அடுத்தடுத்து இரண்டு மத மோதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்கோட்டில், சமூக ஊடகங்களில் ஆட்சேபணைக்குரிய சில பதிவுகளை பதிந்த முஸ்லிம், ஹிந்து தரப்பினை சேர்ந்த சில இளைஞர்கள் பதிவேற்றியுள்ளனர். இது இருதரப்புக்கும் இடையே வார்த்தைப் போராக மாறியது. அவற்றை நீக்குவதை குறித்து ஒரு பொது இடத்தில் பேச இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அந்த இடத்திற்கு வந்த 5 ஹிந்து இளைஞர்களை 25க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொடூரமாகத் தாக்கினர். காவலர்கள் அங்கு வருவதற்குள் அந்த கும்பல் தப்பிவிட்டது. இவ்வழக்கில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 12 பேரை கைது செய்துள்ளனர்.

ராதான்பூரில் வீட்டில் தனியாக இருந்த ஒரு ஹிந்துப் பெண்ணின் மீது ஒருதலைப்பட்ச காதல் கொண்ட ​​யாசின் மஜிகான் பலோச் என்ற ஒரு முஸ்லிம் இளைஞன், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினான். அந்த பெண் சம்மதிக்க மறுத்ததால் கோபமடைந்த யாசின் அந்த பெண்ணை கொல்லும் நோக்கில் தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்று சுவரிலும் கண்ணாடி ஷோகேஸிலும் மோதினான். அவளது தந்தையை கொல்வதாகவும் மிரட்டினான். அந்த பெண் உதவி கோரி கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் வந்து யாசினை வீட்டுக்குள் வைத்து பூட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுபோன்ற தொடர் குற்றச் சம்பவங்களையடுத்து குஜராத்தில் பல ஹிந்து அமைப்பினர் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.