பீகாரின் சீதாமர்ஹி மாவட்டத்தை சேர்ந்தவர் அங்கித் குமார் ஜா. இவர், தனது வீட்டின் அருகில் இருந்த வெற்றிலை பாக்குக் கடைக்கு சென்றார். அங்கு அவர், நூபுர் ஷர்மாவின் சமூக ஊடக நிலையை தனது அலைபேசியில் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சில முஸ்லிம் நபர்களுக்கு இது பிடிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் அவரது பின்னால் இருந்து கத்தியால் ஆறு முறை அவரை கடுமையாகத் தாக்கினர். இதையடுத்து தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கித் குமார் ஜா. இது குறித்து அவரிடம் விசாரித்த டைனிக் பாஸ்கர் ஊடகத்திற்கு அவரே இந்த தகவலை அளித்துள்ளார். ஆனால், இவ்வழக்கை விசாரித்து வரும் காவல்துறையினர், இதில் திட்டமிட்ட ரீதியில் வகுப்புவாத கோணத்தை மறைக்கின்றனர். சிகிரெட் புகையை முகத்தில் விட்டதால் இரு குழுகளுக்கிடை ஏற்பட்ட பிரச்சனை இது என திசை திருப்புகின்றனர், இதில் நுபுர் சர்மா விவகாரத்தை மறைக்கின்றனர், என அக்னித் குமாரின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதில் ஈடுபட்டதாக, முகமது பிலால், முகமது நிஹால், குலாப் ரபன்னி, ஹிலால் ஆகிய நால்வர் மீது காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் இதுவரை கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.