சாலை கட்டுமானம் மற்றும் நெடுஞ்சாலை பணிகளுக்காக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சி.எஸ்.ஐ.ஆர் உருவாக்கிய இரண்டு சாலை போடும் இயந்திரங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘அதிநவீன தொழில்நுட்பங்களில் பல வளரும் நாடுகளை விஞ்சும் வகையில் பாரதம் முன்னணியில் உள்ளது. ‘ஆத்மநிர்பார் பாரத்’ திட்டத்தின் மூலம் உள்நாட்டிலேயே சாலை மேல் அடுக்கை உருவாக்கும் ‘மொபைல் கோல்ட் மிக்சர் கம் பேவர்’ இயந்திரம் மற்றும் குழிகளை சரிசெய்யும் ‘பேட்ச் ஃபில் மெஷின்’ இயந்திரம் உருவாக்கப்பட்டு உள்ளன. இவை மலைப்பாங்கான மாநிலங்களில், குறிப்பாக வடகிழக்கு பிராந்தியத்தில் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்’ என்று கூறினார்.