வீரமணிக்கு ஆதீனம் நன்றி

மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ‘தருமபுரம் ஆதீன மடத்தில் பாரம்பரியமான பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை தமிழகமே உற்று நோக்குகிறது. பட்டினப் பிரவேசத்துக்கு அனுமதி அளித்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆதீன மடங்களின் சமய, சம்பிரதாயங்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். பட்டினப் பிரவேசம் என்றால் என்னவென்றே யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், அதை சர்ச்சையாக்கி இப்போது உலகறியச் செய்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஏழை, எளியோர் உட்பட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு தரிசன கட்டண நடைமுறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். ஆதீன மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோயிலில் அறநிலையத் துறை அதிகாரிகளே முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது குறித்து தமிழக அரசுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.