சென்னை மண்ணடியில் உள்ள சில கடைகளில் வெளிநாடுகளில் இருந்து வரும் பொருள்களை வரி செலுத்தாமல் இறக்குமதி செய்து, விற்பனை செய்வதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் மண்ணடி இரண்டாவது கடற்கரை சாலையில் உள்ள மூன்று கடைகளில் கடந்த மாத இறுதியில் திடீர் சோதனை நடத்தினா். அப்போது, கடை உரிமையாளா்கள் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்டவா்கள் சுங்கத்துறை அதிகாரிகளை சூழ்ந்துகொண்டு பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, தகாத வார்த்தைகளால் திட்டியும் மிரட்டியும் உள்ளனா். இதனால், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தாமல் திரும்பிச் சென்றுள்ளனா். பின்னர் அவர்கள், இது குறித்து வடக்கு கடற்கரைச்சாலை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்பட 9 பிரிவுகளின் கீழ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது சம்பந்தமாக கடந்த ஞாயிறு அன்று ஒரே ஒரு கடை ஊழியா் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மற்ற கடை உரிமையாளா்களை காவல்துறை தேடி வருவதாக கூறப்படுகிறது. இதில் இருவர் மீது ஏற்கெனவே ஐ.எஸ்.ஐ.எஸ் முஸ்லிம் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்களுக்கு, ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் செய்ததாக ராஜஸ்தான் மாநில காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.