குறைந்தது பயங்கரவாதம்

நாடாளுமன்ற உறுப்பினர் சிராக் பாஸ்வான் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சக இணையமைச்சர் நிசித் பிரமானிக் பதிலளித்து பேசுகையில், ‘கடந்த 3 ஆண்டுகளில் சீனா மற்றும் பூடான் எல்லையில் ஊடுருவல்கள் எதுவும் நடைபெறவில்லை. ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதில் 366 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், 96 பொதுமக்கள் உயிரிழந்தனர். 81 பாதுகாப்புப் படையினர் வீர மரணம் அடைந்தனர். காஷ்மீர் பண்டிட்டுகள் உட்பட எந்த ஹிந்துக்களும் வெளிமாநிலங்களுக்கு இடம்பெயரவில்லை. பணி நிமித்தமாகவும் வேறு சில காரணங்களுக்காகவும் காஷ்மீரில் வசிக்கும் சில பண்டிட் குடும்பங்கள் அருகில் உள்ள ஜம்முவுக்கு குடிபெயர்ந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ஊடுருவல் மற்றும் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் 2018 முதல் கணிசமாகக் குறைந்துள்ளன. இடதுசாரி பயங்கரவாதத்தின் எண்ணிக்கையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 2018ல் 143 ஊடுருவல் சம்பவங்கள் நடந்துள்ளன. 2021 நவம்பர் வரை 28 ஊடுருவல் சம்பவங்கள்தான் நடந்துள்ளன. 2018ல் ஜம்மு காஷ்மீரில் 417 பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்தன. தற்போது அது 244 ஆகக் குறைந்துள்ளது’ என தெரிவித்தார்.