குஜராத்தின் அஸ்தால் திட்டம்

பிரதமர் நரேந்திர மோடி, இன்று குஜராத்தின் ​​வல்சாத் மாவட்டத்தில் உள்ள 174 பழங்குடி கிராமங்கள் மற்றும் 1,028 குக்கிராமங்களில் வசிக்கும் 4.50 லட்சம் மக்களுக்கு குழாய் நீரை உறுதி செய்யும் அஸ்தால் திட்டம் உட்பட ரூ.3,050 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். 7 திட்டங்களை தொடங்கி வைத்தல், 12 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், 14 திட்டங்களுக்கு பூமி பூஜை ஆகியவை இதில் அடங்கும். அஸ்தால் திட்டத்தில், சுமார் 200 மாடி கட்டிடம் (1,875 அடி) உயரத்திற்கு தண்ணீரை எடுத்துச் செல்வதன் மூலம் மலைப்பாங்கான பகுதிகளில் தண்ணீர் கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்துள்ளது. இத்திட்டம் குறித்து பேசிய குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், “வல்சாத் மாவட்டத்தின் கப்ரடா மற்றும் தரம்பூர் தாலுகாக்களில் ஆஸ்தால் திட்டத்தை முடிப்பது சவாலான பணியாக இருந்தது, ஆனால் எங்கள் பொறியாளர்கள் அனைத்து தடைகளையும் தாண்டியதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார். பொறியியல் கண்ணோட்டத்தில் இந்த திட்டம் ஒரு தொழில்நுட்ப அதிசயமாக பார்க்கப்படுகிறது. தரம்பூர் மற்றும் கப்ரடா ஆகிய பழங்குடியினப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான நிலங்கள் பாறைகள் நிறைந்து, மழைநீரை தேக்கிவைக்காமல் வெளியேற்றும் வகையில் இருப்பதால் அங்கு மழைநீரைத் தேக்கி வைப்பதோ, நிலத்தடி நீரைச் சேமித்து வைப்பதோ சாத்தியமில்லை. எனவே, இதற்காக மதுபன் அணையில் இருந்து குழாய் மூலம் கொண்டுவரப்படும் நீர், மூலம் 28 ராட்சத பம்பிங் ஸ்டேஷன்கள் மூலம் லிப்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீரேற்று நிலையங்களுக்கு செலுத்தப்படும். அங்கிருந்து குழாய்கள் மூலம் மக்களின் வீடுகளை நேரடியாகச் சென்றடையும்.