ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவன் கொலை

சஹாராவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அத்னன் அபு வாலித் அல் செஹ்ராவியை பிரான்ஸ் நாட்டின் ராணுவம் கொன்றதாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். சஹாராவில் உள்ள சஹேலில் பயங்கரவாத குழுக்களுடன் நடைபெற்ற சண்டையில் இது பிரெஞ்சு ராணுவத்தின் மிகப்பெரிய வெற்றி என கூறிய பிரான்ஸ் அதிபர், இந்த ராணுவ நடவடிக்கைகள் நடைபெற்ற இடத்தை தெரிவிக்க மறுத்துவிட்டார். மேற்கு ஆப்பிரிக்காவின் சாஹல் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவராக இருந்த செஹ்ராவி, பல பயங்கரவாத செயல்களை நிகழ்த்தியவன். ஆகஸ்ட் 2020ல், செஹ்ராவி ஆறு பிரெஞ்சு பணியாளர்கள், அவர்களின் நைஜீரிய ஓட்டுனரை தூக்கிலிட்டான். இதனை நினைவுகூர்ந்த பிரான்ஸ் அதிபர், இறந்த அனைத்து மாவீரர்களை குறித்தும் அவர்களின் குடும்பங்கள் குறித்தும் நாடு சிந்திக்கிறது. அவர்களின் தியாகம் வீணாகாது என தெரிவித்தார்.