உத்தரப்பிரதேசத்தில் 26 மாவட்டங்களைச் சேர்ந்த 4,200க்கும் மேற்பட்ட பெண்கள், கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்கள், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியின்போது பெண்கள் அவர்கள் தயாரிக்கும் பொருட்களை வாங்கும் நிறுவனங்களுக்கும் இடையே நேரடித் தொடர்பை ஏற்படுத்த ‘ஹலோ கமல் சக்தி’ மொபைல் செயலியையும் இரானி துவக்கி வைத்தார்.