கோயில் நிலம் கை வைத்தால் கைது

தமிழகத்தில் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது உரிமையியல் வழக்குகள் மட்டுமே போட முடியும். கைது செய்ய முடியாது. இந்த தைரியத்தால் கோயில் நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுகின்றன. இந்நிலையில், கோயில் நிலங்களை ஆக்கிரத்தால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக சட்ட மசோதா நேற்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் கடும் குற்றம் செய்தவர்களாக கருதப்பட்டு ஜாமினில் விட முடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று சட்டமசோதா தெரிவிக்கிறது.