கைதான விவசாய போராளிகள்

திக்ரி எல்லையில் நடைபெறும் புதிய வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க, மேற்கு வங்கத்திலிருந்து வந்த 25 வயது பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரையும் ஜஜ்ஜார் காவல்துறையினர் கடந்த புதன்கிழமை அன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி அனில் மாலிக் தனது கூட்டாளியான அனுப் சீனாட் உடன் இணைந்து அந்த பெண்ணை ரயிலிலும், விவசாயிகள் போராட்ட களத்திலும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதனை வீடியோ பதிவு செய்ததாகவும் ஒப்புக்கொண்டார். அந்த வீடியோ காவல்துறையால் கைப்பற்றப்பட்டது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த பெண் கடந்த. ஏப்ரல் 30ல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பகதர்கரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பலியானார் என்பதும். இது குறித்து விவியசாய போராட்டத் தலைவர்களான ராகேஷ் திகாயத், யோகேந்திர யாதவ் உள்ளிட்டோர் இன்றுவரை வாய் திறக்காமல் மௌனமாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.