அண்ணாமலை சவால்

தமிழக முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சில சந்தேகங்களுக்கு சரியான முறையில் விளக்கம் அளிக்க முடியாத தி.மு.கவினர், அவர் மீது ரூ. 100 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். மேலும், முதல்வரின் பயணம் குறித்து அவதூறான தகவல்களை முகநூலில் பதிந்ததாகக்கூறி, சேலம் எடப்பாடியை சேர்ந்த பா.ஜ.க பிரமுகரை தமிழக அரசின் காவல்துறை கைது செய்தது. இந்நிலையில், சென்னை கமலாயலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘நான் பேசிய அனைத்திற்கும் ஆதாரம் இருக்கிறது. அ.தி.மு.க அமைச்சர்களை மிரட்டி நான் பணம் வாங்கியதாகவும், என்னுடைய வீடியோ இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். ஆதாரம் இருந்தால் உங்கள் முழு போலீஸ் படையுடன் முடிந்தால் வந்து என்னை கைது செய்து பாருங்கள். நான் பா.ஜ.க அலுவலகத்தில்தான் இருப்பேன். இல்லையெனில் தமிழக மக்கள் நீங்கள் கூறுவதை ஏற்க மாட்டார்கள். ஆயிரம் மானநஷ்ட வழக்குப் போட்டாலும் இந்த விவசாய அண்ணாமலை தயாராக உள்ளேன். என்னிடம் உள்ள ஆதாரம் தவறு என்று நிதியமைச்சர் கூறட்டும் பார்க்கலாம். என கூறியுள்ளார்.