உத்தரப் பிரதேசம் கான்பூரில் உள்ள புளோரெட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் பயிலும் முஸ்லிம் அல்லாத மாணவர்களையும் கல்மா படிக்க வற்புறுத்திய காட்சி, சமூக ஊடகங்களில் பரவியது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு பல பெற்றோர்களும் ஹிந்து அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். மேலும், காலை தொழுகையின் போது மாணவர்களை கட்டாயமாக இஸ்லாமிய வசனங்களை (கல்மா) படிக்க வைப்பதாக பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இதுகுறித்து பேசிய கவுன்சிலர் மகேந்திர சுக்லா, ‘”ஜன கண மன…’ இங்கு பாடப்படுவதில்லை. அதற்கு பதிலாக, மாணவர்கள் கல்மாவைப் படிக்க ஊக்குவிக்கின்றனர். அவர்கள் நிச்சயமாக பி.எப்.ஐயுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவோம்” என்று கூறினார். “இது ஏன் ஹிந்து உள்ளிட்ட மற்ற மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது? இந்த பிரார்த்தனையின் அர்த்தம் என்ன, நீங்கள் ஏன் அர்த்தத்தை எழுதவில்லை? நாங்கள் எந்த மதத்தையும் குறைகூறவில்லை, ஆனால் நீங்கள் கற்பிக்க விரும்பினால், தயவுசெய்து மதரசாவில் அதனை கற்பிக்கவும்” என்று பா.ஜ.க தலைவர் கீதா நிகாம் கேள்வி எழுப்பினார்.