ஜம்மு காஷ்மீரின் தொழில் வளர்ச்சிக்காக புதிய இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். அப்போது அவர், ‘சுற்றுலா, கல்வி, தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய தொழில் தொடங்க ஊக்க சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் உள்ளூரில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். ஜம்மு காஷ்மீரில் தொழில் வாய்ப்புக்கான புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகமான சாதக அம்சங்களைக் கொண்ட தொழில் கொள்கை தற்போது ஜம்மு காஷ்மீரில் மட்டுமே உள்ளது. பல்வேறு தொழில் நடவடிக்கைகள் மூலம் இம்மாநிலத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி முதலீடுகள் வந்து சேரும்’ என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.