காஷ்மீரின் பாரமுல்லாவில் பணியாற்றும் 19வது காலாட்படை பிரிவை சேர்ந்த மேஜர் ஜெனரல் அஜய் சந்த்பூரியா, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘காஷ்மீர் பாகிஸ்தான் எல்லையில் சமீபத்தில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட நவீன ஆயுதங்களும் பல்வேறு சாதனங்களும் பொதுவாக பயங்கரவாதிகள் பயன்படுத்துபவை அல்ல. அவை அமெரிக்க துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் விட்டுச்சென்றவை. இவை இப்போது பாரதத்திற்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளின் கைகளுக்கு வந்துள்ளன. இது, ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் இப்போது பாகிஸ்தான் வழியாக காஷ்மீரில் ஊடுருவ முயற்ச்சிக்கின்றனர் என்பதையே காட்டுகிறது. அண்டை நாட்டில் இருந்து 120 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ தயாராக உள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் சுமார் 200 பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் உள்ளனர். மூளைச்சலவை செய்யப்பட்ட உள்ளூர் இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகம். எனினும் தற்போது பயங்கரவாத நடவடிக்கைகள் குறைந்துள்ளது. அவர்களின் ஆட்சேர்ப்பும் குறைந்துள்ளது’ என தெரிவித்தார்.