அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் முன்னாள் இயக்குனர் டாக்டர் ராபர்ட் ரெட்ஃபீல்ட், கொரோனா வைரஸ் ஒரு சீன ஆய்வகத்தில் இருந்தே பரவியதாக தான் நம்புவதாகவும். அது வவ்வால்களில் இருந்து மனிதர்களுக்கு பரவியிருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த வைரஸ் சில மேற்கத்திய நாட்டில் இருந்து உருவாகி சீனாவுக்கு வந்ததாக சீனா தெரிவித்திருந்தது. ஆனால், வைரஸின் துவக்கம் குறித்து ஆய்வு செய்வதற்கான எந்தவொரு முயற்சியையும் அது எடுக்கவில்லை. மேலும், அது குறித்து ஆராய சில மாதங்களுக்கு முன்பு, சீனாவுக்கு வருகை தந்த உலக சுகாதார நிறுவன அதிகாரிகளுக்கு முட்டுக்கட்டை போட்டது. அவர்கள், ஊஹானில் உள்ள வைராலஜி ஆய்வகத்தில் தரவு மற்றும் மாதிரிகளை சேகரிக்க அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.