அமெரிக்காவை சேர்ந்த ‘பர்ஸ்ட் சோலார்’ நிறுவனம் தமிழகத்தில் சுமார் 684 மில்லியன் டாலர்கள் செலவில், சூரிய மின்னாற்றல் உற்பத்திக்குத் தேவைபடும் சூரிய மின்தகடுகளில் உள்ள சூரிய ஒளி மின்னழுத்த (பி.வி) மெல்லிய பிலிம் மாட்யூல் உற்பத்தியை துவங்க உள்ளது. இதனால், ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதில் 60 சதவீதம் பேர் பெண்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தோ பசிபிக் பிசினஸ் ஃபோரத்தின் (ஐபிபிஎஃப்) நான்காவது ஆண்டு கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.