அமெரிக்க ராணுவத்தில் இணையும் ஆண் பெண்களுக்கு நடத்தப்படும் உடற்திறன் சோதனைகளை மாற்றியமைக்க அமெரிக்க ராணுவம் பரிசீலித்து வருகிறது. பாலின சமத்துவத்தை கடைப்பிடித்து இது நாள் வரை நடத்தப்பட்ட ACFT உடற்சோதனைகளில், பெண்கள் 65 சதவீதத்தினரும் ஆண்கள் 10 சதவீதமும் தோல்வியுறுகின்றனர் என ராணுவம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது அவர்களின் நம்பகத்தன்மையை குறைத்து மதிப்பிடுவது அல்ல, ஆனால், அவர்களால் அவர்களது அணி வீரர்களின் பணியை ஆபத்தில் சிக்கவைக்க இச்சூழல் ஏதுவாக மாறிவிடும் என கருதப்படுவதால் இது குறித்து அமெரிக்க ராணுவம் சிந்திக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க இராணுவத்தின் முதல் பெண் காலாட்படை அதிகாரியான கேப்டன் கிறிஸ்டன் கிரிஸ்ட், உடற்சோதனைத் தரத்தை குறைப்பது இராணுவத்தையும் பெண்களையும் பாதிக்கும் என்று கூறியுள்ளார்.