ஜம்மு காஷ்மீர் அரசு, அமர்நாத் கோவில் நிர்வாகத்திற்கு ஸ்ரீநகரில் உள்ள பந்தா சௌக் பகுதியில் மூன்றரை ஏக்கர் நிலத்தை ஆண்டு வாடகையாக ரூ. 250க்கு 40 வருட காலத்திற்கு குத்தகைக்கு விட அனுமதி அளித்துள்ளது. இங்கு, கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுமார் 3.500 பேர் தங்குவதற்கு வசதியாக யாத்ரி நிவாஸ் கட்டப்படும். அடுத்த 18 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2008ல் காஷ்மீரின் சோனாமார்க் பகுதியில் அமர்நாத் குகைக்கு அருகில் இதற்காக சுமார் 100 ஏக்கர் வன நிலம் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு பெரும் போராட்டங்கள் வெடித்தன. பலர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் பி.டி.பி காங்கிரஸ் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியது. குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அன்றைய கவர்னர் என்.என் வோரா, இந்த நில மாற்ற உத்தரவை ரத்து செய்தபிறகுதான் காஷ்மீரில் இந்த ஐந்து மாத போராட்டம் முடிவுக்கு வந்தது என்பது வரலாறு.