அகில பாரத ஒருங்கிணைப்பு கூட்டம்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகிலபாரத தகவல்தொடர்பு அமைப்பாளரான சுனில் அம்பேத்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சமூக வாழ்வின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தால் ஈர்க்கப்பட்ட பல்வேறு அமைப்புகளின் தலைமைப் பணியாளர்களின் சமன்வய பைட்டக் (ஒருங்கிணைப்பு கூட்டம்) தெலுங்கானாவில் உள்ள பாக்யா நகரில் (ஹைதராபாத்தில்) வரும் 2022 ஜனவரி 5 முதல் 7 வரை நடைபெறும். இந்த அகில பாரத அளவிலான கூட்டம் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர். மோகன் பாகவத், அகில பாரத பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோஸபலே உள்ளிட்டத் தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில், விஷ்வ ஹிந்து பரிஷத், ராஷ்ட்ரீய சேவிகா சமிதி, வித்யாபாரதி, பாரதீய மஸ்தூர் சங்கம், வனவாசி கல்யாண் ஆசிரமம், பாரதிய கிசான் சங்கம் உள்ளிட்ட முப்பத்தாறு அமைப்புகளை சேர்ந்த உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். இக்கூட்டத்தில் சேவை பணிகளின் தற்போதைய நிலை குறித்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ​​​​ஒவ்வொரு அமைப்பும், தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து தெரிவிக்கும். மேலும், இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல், குடும்ப விழிப்புணர்வு, சமூக ஒருங்கிணைப்பு ஆகிய முக்கிய பகுதிகள் மற்றும் அந்தத் துறைகளில் ஒருங்கிணைந்த முயற்சிகள் குறித்தும் சிறப்பு விவாதங்கள் நடைபெறும்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.