அல்கொய்தா சதித்திட்டம்

அல்கொய்தாவின் இன்ஸ்பைர் பத்திரிகையில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையில், அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ள ‘லோன் வுல்ப்’ எனப்படும் தனி நபர் ஜிஹாதி பயங்கரவாத தாக்குதல்களை தொடுக்க அழைப்பு விடுத்துள்ளது. கிறிஸ்தவ, யூத, நாத்திக காவல்துறை அதிகாரிகளை கார் ஏற்றி கொல்வது, சுட்டுக்கொல்வது, வன்முறை போராட்டங்களை நடத்தி திசைதிருப்பி கொல்வது போன்றவற்றை செய்யும் பயங்கரவாதிகளுக்கு 60 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பிட்காயின் பரிசுத்தொகையும் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொலராடோவில் உள்ள மளிகைக் கடையில் பத்து பேரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட சிரியாவைச் சேர்ந்த அஹ்மத் அல்-இசா என்ற அமெரிக்கரை அல்கொய்தா  பாராட்டியுள்ளது. மேற்கத்திய நாடுகள் மட்டுமல்லாது உலக அளவிலான தாக்குதலையும் ஊக்குவித்துள்ளது. எனினும், ‘பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அமெரிக்காவின் தொடர் முயற்சிகள் காரணமாக அல்கொய்தாவின் திறன்கள் கடுமையாக சீரழிந்துவிட்டன’ என பயங்கரவாத எதிர்ப்புக்குழு நிபுணர்களின் கருத்துத் தெரிவித்துள்ளனர்.