மத்திய அரசின் நிதி ஆயோக் மற்றும் ஹெல்த்நெட் குளோபல்’ ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து அவசர தேவைக்கு ஆகாய மார்க்கமாக மருந்து பொருட்கள் என்ற திட்டத்தை துவக்கி உள்ளது. மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, தெலங்கானா மாநில அமைச்சர் கே.டி ராமராவ் ஆகியோர் தெலுங்கானா மாநிலம் விகாராபாத்தில் இதனை துவக்கி வைத்தனர். இத்திட்டத்தின் வாயிலாக, ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் வாயிலாக போக்குவரத்து வசதியில்லாத இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கு தடுப்பூசி, மருந்துகள் போன்றவற்றை கொண்டு சேர்க்க முடியும். மருத்துவத் துறை, தொழில் நுட்பத் துறை, மத்திய மாநில அரசுகள் இப்பணியை மூன்று மாதங்களுக்கு ஆய்வு செய்யும். பின் இத்திட்டம் நாடு முழுதும் விரிவுபடுத்தப்படும்.