அமலாக்கத்துறை அதிரடி முடிவு

கேரளாவின் அரசியலில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள தங்கக் கடத்தல் வழக்கை கர்நாடகாவுக்கு மாற்ற அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். கேரளாவில் விசாரணை முறைப்படி நடக்காமல் முடக்கப்படும் எனக் கருத்துத் தெரிவித்த அவர், கொடுத்துள்ள ஆதாரங்கள், 164 பக்க வாக்குமூலத்தில் கேரள முதல்வர் பிரனாய் விஜயன், அவர் மகள் மற்றும் கே.டி.ஜலீல் உள்ளிட்டோர்தான் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.