தமிழகத்தில் பன்னெரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துரையாடினார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு ஆளுநர் விருது வழங்கி கௌரவித்தார். பின்னர் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசுகையில், “மருத்துவம் படிக்க ஆசைப்படுபவர்கள், ‘நீட்’ தேர்வுக்கு தயாராக இருக்க வேண்டும். சட்டம் படிக்க விரும்புபவர்கள் சிறப்பான சட்டப் பள்ளியை தேர்வு செய்ய வேண்டும். அலைபேசியை மாணவர்கள் கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்த வேண்டும். இலக்கை அடைவதில் தெளிவு இருக்க வேண்டும்” என அறிவுறித்தினார். இதனிடையே, மாநில பிளஸ் டூ பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களில் ஒருவரான தென்காசியைச் சேர்ந்த செல்வி. சப்ரீன் இமானா, அவரது குடும்பத்தினருடன் சென்று ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.