மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி) 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இந்த தீர்ப்பு, பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்துக்காட்டுகிறது. இந்த ஒதுக்கீடு நாட்டு மக்களுக்கு சமூக நீதியை வழங்கும் வகையில் உள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் அகில இந்திய இடஒதுக்கீடு முடிவால் ஓ.பி.சி., பிரிவினரில், 1,500 மாணவர்களும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினரில் 550 மாணவர்களும் இளநிலை மருத்துவப் படிப்பில் சேர முடியும். முதுநிலை மருத்துவ சேர்க்கையில் ஓ.பி.சி பிரிவில் 2,500 மாணவர்களும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவில் 1,000 மாணவர்களும் பலனடைவார்கள். இந்த நடவடிக்கை, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் எந்த இட ஒதுக்கீட்டையும் அனுபவிக்க முடியாமல் பாரதத்தில் வசிக்கும் ஒரு தரப்பினருக்கு பலனை அளிக்கும். அகில இந்திய ஒதுக்கீட்டில் எந்த மாநிலத்தில் இருந்தும் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். கடந்த ஆறு ஆண்டுகளில், 179 புதிய மருத்துவ கல்லுாரிகள் துவங்கப்பட்டுள்ளன. இதைத்தவிர, மருத்துவம் சார் உற்பத்தி துறைகளிலும் பாரதத் தயாரிப்புகளை அதிகப்படுத்தி மற்ற நாடுகளுக்கு மத்தியில் பெருமை மிக்கதாக பாரதம் திகழ்கிறது’ என அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.